'மாமா குட்டி' முதல் 'ரபேல் வாட்ச்' வரை...2022ல் ட்ரெண்டான வார்த்தைகள்
பேஸ்புக் தனது பெயரை 'மெட்டா' என மாற்ற முடிவு செய்ததிலிருந்து தொழில்நுட்ப உலகில் அதிகம் பேசப்பட்டு வரும் வார்த்தை ஆகியிருக்கிறது, 'வெர்சுவல் ரியாலிட்டி, ஆகுமென்டட் ரியாலிட்டி என அனைத்தையும் உள்ளடக்கிய தொழில்நுட்பம் தான் இந்த 'மெட்டாவெர்ஸ்'. இந்த புது தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு உலகத்திற்கு மனிதர்களால் நொடிப்பொழுதில் சென்று வர முடியும்.
ஐடி ஊழியர்களை அலறவிட்ட 'மூன்லைட்டிங்'...மூன்லைட்டிங்கில் ஈடுபட்டதால் வேலையை விட்டு அதிரடியாக நீக்கம்... என தங்கள் ஊழியர்களை கதி கலங்க செய்தன, ஐடி நிறுவனங்கள்.
ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்த நிறுவனத்திற்கு தெரியாமல் இன்னொரு நிறுவனத்திலும் வேலை செய்வதற்கு பெயர்தான் 'மூன்லைட்டிங்'. இந்தியாவின் 100 ஐடி ஊழியர்களில் ஒருவர் மூன்லைட்டிங்கில் ஈடுபடுவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்ததே இந்த கலக்கத்திற்கு காரணமாகியது.
நயன் - விக்கி மூலம் ட்ரெண்டான 'வாடகைத்தாய்' திருமணமான நான்கே மாதத்தில் ட்வின்ஸ் பெற்றெடுத்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர், நயன்- விக்கி தம்பதியர். பிறகு வாடகை தாய் மூலம் அவர்கள் குழந்தைகளை பெற்றெடுத்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து எழுந்த சர்ச்சை... வாடகை தாய் முறை என்றால் என்ன ? வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க விதிமுறைகள் என்னென்ன? என்ற விவாதங்கள் எழ காரணமாகின.