2022ல் - ஷாக் கொடுத்த ஓய்வு அறிவிப்புகள்!
பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் ஓய்வு
இந்த ஆண்டு தொடக்கத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான முகமது ஹபீஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
2003 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்காக சுமார்
18 ஆண்டுகள் ஆல்ரவுண்டராக களமிறங்கியவர், முகமது ஹபீஸ்.
25 வயதில் ஓய்வு - அதிரவைத்த நம்பர்-1 வீராங்கனை
டென்னிஸில் இருந்து விடைபெற்ற ஆஷ்லே பார்டி
மார்ச் மாதம் உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, 25 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு, ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தினார். 23 வயதில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான ஆஷ்லே பார்டி, நம்பர் -1 இடத்தில் இருக்கும் போதே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
விடைபெற்ற 'புன்னகை இளவரசன்' ராஸ் டெய்லர்
ஏப்ரல் மாதம் நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ராஸ் டெய்லர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நெதர்லாந்துக்கு எதிராக அவர் விளையாடிய ஒருநாள் போட்டியே அவரது கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது. சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த ஒரே நியூசிலாந்து வீரர் என்ற பெருமைக்குரியவர், ராஸ் டெய்லர்.
'மும்பையின் தத்துப்பிள்ளை' - வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொலார்ட் ஓய்வு
அதே ஏப்ரல் மாதம் மும்பையின் தத்துப்பிள்ளையான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பொலார்ட் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். பிரைன் லாரா தலைமையில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அறிமுகமான பொலார்ட், பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியையே வழிநடத்தும் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார். ஆல் ரவுண்டராக கலக்கிய பொலார்ட் இதுவரை டெஸ்ட் போட்டியே ஆடாதவர்.
மகத்துவமான பங்களிப்பு! - மிதாலி ராஜ் ஓய்வு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை கடந்த 17 ஆண்டுகளாக வழிநடத்திய கேப்டன் மிதாலி ராஜ், கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மிதாலி ராஜ், கடந்த 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றவர்.