செய்யாத குற்றத்திற்கு 20 ஆண்டு சிறை - பெண் 'சீரியல் கில்லர்' ஒரு நிரபராதி - தலைகுனிந்த நீதித்துறை
ஆஸ்திரேலியாவின் மிக மோசமான பெண் சீரியல் கில்லர் என்று அழைக்கப்பட்ட பெண் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணி பற்றி பார்க்கலாம் ... சீரியல் கில்லர்களைப் பற்றிய கதைகளை கேட்டிருப்போம்... ஏதாவது ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு ஒரே பாணியில் தொடர் கொலைகளை அரங்கேற்றுவர்... 99 சதவீதம் சீரியல் கில்லர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது கை வைப்பதில்லை... வெளியில் தான் அவர்களின் வேட்டை நடக்கும்... ஒரு சில கதைகள் இதற்கு விதி விலக்கு... அப்படி ஒரு கதைதான் Kathleen Folbigg உடையது... Kathleen Folbigg... ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான பெண் சீரியல் கில்லர் என்று முத்திரை குத்தப்பட்டவர்... இவரா?... கொலையா?... ச்ச... ச்ச இருக்காது... என்று நினைக்கும் அளவுக்கு அப்பாவியான முகம்... ஆனால் தன் 4 குழந்தைகளையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் Kathleen...
Caleb, மற்றும் Patrick என்ற மகன்களையும், Sarah மற்றும் Laura ஆகிய தன் மகள்களையும் கொலை செய்ததாக Kathleen ௨௦ ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்... ஆனால், அந்த குழந்தைகள் இயற்கையாகவே இறந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுவதாக சமீபத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது...அவரது 4 குழந்தைகளும் 1989 முதல் 1999க்கு இடைப்பட்ட காலங்களில் அடுத்தடுத்து பலியாகின... தாய்மை என்பது எவ்வளவு கடினமானது என்பது போன்ற Kathleen-ன் கடிதங்களே அவருக்கு எதிரியாக மாறின... சூழ்நிலைகளைக் காரணம் காட்டி Kathleen தான் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்து விட்டதாக குற்றமும் சாட்டப்பட்டது...
இறந்த குழந்தைகளின் உடலில் சிறு காயம் கூட இல்லாத போதிலும், 2003ல் கொலைக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் அவர்... இந்நிலையில் தான் அவரை விடுவிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பலர் நீதிமன்றத்தை வலியுறுத்தினர்... மரபணு மாற்றங்கள் பற்றிய ஆராய்ச்சி குழந்தைகளின் இறப்பு பற்றிய புரிதலையே மாற்றியுள்ளது... ஏனெனில் இறந்த மகள்களான Sarah மற்றும் Laura, CALM2 G114R எனப்படும் மரபணு மாற்றத்தைப் பெற்றவர்கள்... இந்த மரபணு மாற்றமானது திடீர் மாரடைப்பை ஏற்படுத்தவல்லது... அதேபோல் இறந்த மகன்களான Caleb, மற்றும் Patrick-ற்கும் வலிப்புடன் தொடர்புடைய மரபணு மாற்றம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன...
Kathleenக்கு இப்போது வயது 55... செய்யாத குற்றத்திற்காக அவர் 20 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார்... பிள்ளைகளை இழந்த வேதனையோடு கூடுதலாக சிறைத் தண்டனை... இது நீதித்துறையில் நிகழ்ந்த மாபெரும் பிழை என சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்... இத்தனை காலமும் Kathleenக்காக குரல் கொடுத்த மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் அவரது விடுதலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... சூழ்நிலையால் கைதியான Kathleen அறிவியலால் விடுதலையாகியுள்ளார் என்பது தான் உண்மை...