டீச்சர்கள் லீவ் எடுத்தால் பாடம் நடத்தும் 20 அடி நீள பிரமாண்ட பேனா - ஆசிரியர்களின் கண்டுபிடிப்பு..!

x

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சுமார் 20 அடியில் 43 கிலோ எடை கொண்ட பிரமாண்ட இங்க் பேனாவை தயாரித்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.சிர்மவுர் மாவட்டம் நரங்கபாத் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியர்களினால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர பேனா, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியரான சஞ்சீர் அத்ரியின் உதவியுடன் 6 ஆசிரியர்கள் இணைந்து பிரமாண்ட பேனாவை வடிவமைத்துள்ளனர். 45 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள பேனாவிற்கு 2 லிட்டர் இங்க் ஊற்ற வேண்டும். பேனாவில் இடம்பெற்றுள்ள சிசிடிவி கேமரா, சென்சார் தொழில்நுட்பங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்க உதவும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் விடுப்பு எடுத்து கொண்டால், அன்றைய பாடம் பேனாவில் பொறுத்தப்பட்டுள்ள சென்சார் உதவியுடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் விதமாக, பேனா வடிவமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்