ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை... தண்டனைக்கு தடை விதிக்கப்படுமா? - ஏப்ரல் 20 ஆம் தேதி... - சூரத் நீதிமன்றம் அதிரடி

x

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை... தண்டனைக்கு தடை விதிக்கப்படுமா? - ஏப்ரல் 20 ஆம் தேதி... - சூரத் நீதிமன்றம் அதிரடி

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த தீர்ப்புக்கும், தண்டணைக்கும் இடைக்கால தடை கோரியும் காங்கிரஸ் மூத்த தொலைவு ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ராபின் பி மொகேரா விசாரித்தார். ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.எஸ். சீமா, விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றும் ஒட்டுமொத்த வழக்கும் மின்னணு ஆதாரத்தின் அடிப்படையில் நடைபெற்றதாகவும் வாதிட்டார். புகார்தாரர் புர்னேஷ் மோடி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹர்ஷீத் தோலியா, ராகுலின் அவதூறு பேச்சால் மோடி என்ற பெயர்கொண்ட அனைவரும் புண்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய பிறகும் தொடர்ந்து பொறுப்பற்ற, அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதை ராகுல் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என வும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல் காந்தி மீதான உத்தரவை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்