பஸ்ஸுக்குள் ஆதரவின்றி தன்னந்தனியே திக்கு தெரியாமல் கதறிய 2 வயது குழந்தை - நெகிழ்ச்சி காட்சிகள்

x

தர்மபுரி பேருந்து நிலையத்தில் 2 வயது குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் 2 வயது பெண் குழந்தை தனியாக அழுதுக் கொண்டிருந்தது. குழந்தையை கேட்டு யாரும் வராத நிலையில், பொதுமக்கள் குழந்தையை காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், குழந்தைக்கு உடைமாற்றி பால் மற்றும் உணவு அளித்து தூங்க வைத்தனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முன்பக்கமாக குழந்தையுடன் ஏறிய பெண், குழந்தையை பேருந்தில் விட்டுவிட்டு தனியாக கீழே இறங்கியது தெரியவந்தது.

இதையடுத்து முதலுதவி சிகிச்சை அளித்து தொப்பூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர்.

2 வயது குழந்தையை பேருந்துக்குள் விட்டுச் சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

2 வயது குழந்தையை தனியாக விட்டுச் சென்ற சம்பவம், பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்