வின்டர் கிரீன் தைலம் குடித்த 2 மாணவிகள் - குடும்ப பிரச்சினையா? - போலீசார் தீவிர விசாரணை
கொடைக்கானலில், அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில், வின்டர் கிரீன் தைலம் குடித்த இரண்டு மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூஞ்சிக்கல் பகுதியில், அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் மயங்கி விழுந்த நிலையில், மற்றொரு மாணவியும் கழிப்பறையில் மயங்கி இருந்ததாக தெரிகிறது. உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாணவிகள் இருவரும் வின்டர் கிரீன் தைலம் குடித்தது தெரியவந்தது.
Next Story