2 கிலோ தக்காளி ரூ.100.. போட்டி போட்டு அள்ளி செல்லும் மக்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மீண்டும், 2 கிலோ தக்காளி நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டதால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். 130 ரூபாய் வரை உச்சத்தை எட்டிய தக்காளி விலை, தற்போது சற்று குறைந்து 100 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 கிலோ நூறு ரூபாய்க்கு வேனில் வைத்து விற்கப்பட்டது போன்று, மீண்டும் விற்பனைக்காக வேன் வந்ததால், ஏராளமானோர் குவிந்தனர். 2 கிலோ தக்காளி நூறு ரூபாய் என்பதால், அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
Next Story