பெண்களுக்கு இனி குஷியோ குஷிதான்...- 2 IN 1-ஆக கலக்கும் ஆடியோ காதணி -தங்கம், வெள்ளியில் தக தகக்கிறது
பெண்களுக்கு இனி குஷியோ குஷிதான்...- 2 IN 1-ஆக கலக்கும் ஆடியோ காதணி -தங்கம், வெள்ளியில் தக தகக்கிறது
காதணியைப் போல தோற்றமுடைய ஹெட்ஃபோன்கள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன...
தோடுகளைப் போலவே ஹெட்போன்கள் இருப்பதால் பெண்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி என்றே சொல்லலாம்... நோவா எச்1 எனப்படும் இந்த ஆடியோ தோடுகள், உலகின் முதல் காதணிகளில் பதிக்கப்பட்ட முதல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் ஆகும்... பார்ப்பதற்கு ஆடம்பரக் காதணிகளைப் போல அமைந்துள்ள இந்த ஹெட்போன்களை செல்போனுடன் ப்ளூடூத் உதவியுடன் இணைத்துக் கொள்ளலாம்... Nova H1 ஆடியோ காதணிகள் இப்போது இங்கிலாந்தில் கிடைக்கின்றன... மேலும், மேலும் ஜூன் முதல் வட அமெரிக்கா மற்றும் ஜப்பானிலும் இவை கிடைக்கவுள்ளன... தங்க முலாம் பூசப்பட்ட ஆடியோ காதணிகள் 60 ஆயிரத்திற்கும், சில்வர் பூசப்பட்டவை 52 ஆயிரத்திற்கும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.