சென்னை தொழிலதிபர் வீட்டில் 2 துப்பாக்கி, 12 குண்டுகள் கண்டெடுப்பு... வீட்டை ஜப்தி செய்ய சென்ற வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி
சென்னை அண்ணா நகர் 5-வது அவென்யூவில் வசித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குப்தாவின் குடும்பத்தினர், அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில், வீட்டை அடமானம் வைத்து, 53 லட்ச ரூபாய் தொழில் கடன் வாங்கியிருந்தனர்.
கடன் தொகையை திருப்பிச் செலுத்தாததால், வங்கி நிர்வாகம் வீட்டை ஜப்தி செய்தது.
இந்த நிலையில், வங்கி அதிகாரிகள், அந்த வீட்டில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்தபோது, ஒரு அறையில் 12 குண்டுகளுடன் 2 கைத்துப்பாக்கிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போலீசார், கைத்துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை பறிமுதல் செய்து, அவற்றுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சஞ்சய் குப்தா தம்பதியினர் தலைமறைவாக இருப்பதால், அவர்களின் செல்போன் எண்களை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.