+2 பொதுத்தேர்வு முடிவுகள்... மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, விருதுநகர் மாவட்டம் 97.85 விழுக்காடுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீதத்துடன் 2ம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 97.59 விழுக்காடுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. கோவை மாவட்டம் 97.57 விழுக்காடுடன் 4ம் இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் 97.36 சதவீதத்துடன் 5ம் இடத்தையும் பிடித்துள்ளன. சிவகங்கை மாவட்டம் 97.26 விழுக்காடுடன் 6வது இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 97.05 விழுக்காடுடன் 7ம் இடத்திலும் உள்ளன. ஈரோடு மாவட்டம் 96.98 விழுக்காடுடன் 8ம் இடத்திலும், நாமக்கல் மாவட்டம் 96.94 விழுக்காடுடன் 9ம் இடத்திலும் உள்ளன. அரியலூர் மாவட்டம் 96 புள்ளி 88 விழுக்காடுடன் 10வது இடத்தில் உள்ளது. திருநெல்வேலி 96.61 சதவீதத்துடன் 11ம் இடத்திலும், திருச்சி 96.02 விழுக்காடுடன் 12ம் இடத்திலும் உள்ளன.