ஆஸி. எதிரான முதல் ஒருநாள் போட்டி - இந்தியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் 81 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்பு 189 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்பு கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், 39.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய வீரர் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றது.