18 நாட்கள் 103 போலி டாக்டர்கள் கைது - தொடரும் டிஜிபியின் எச்சரிக்கை

x

தமிழகம் முழுவதும் 18 நாட்கள் நடைபெற்ற சோதனைகளில், முறையாக அனுமதி பெறாமல் மருத்துவம் பார்த்து வந்த 103 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல், அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த 18 நாட்களாக மாநிலம் முழுவதும் காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், உரிய அனுமதி இல்லாமல் மருத்துவம் பார்த்து வருவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்