விவசாய சங்க செயலாளர் கொடூர கொலை..சிக்கிய 17 வயது சிறுவன் - வெளியாகிய பரபரப்பு வாக்குமூலம்

x

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே, விவசாய சங்க மாநில செயலாளர் கொலை வழக்கில், கைதான சிறுவன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுகனூர் அருகே எம்.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்த விவசாய சங்க மாநில செயலாளர் சண்முகசுந்தரம் என்பவர், மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் குறித்து, சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்த 17 வயது சிறுவன், திருச்சி சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சரணடைந்தான். சிறுவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சண்முக சுந்தரத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அறிவழகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அறிவழகனின்‌ சகோதரி மகன் சண்முகவேல், இளவரசன் மற்றும் சிறுவன் சேர்ந்து சண்முக சுந்தரத்தை கொலை செய்ததாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும் இதற்கு உடந்தையாக அறிவழகன், பால்ராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. 5 பேரையும் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்