16 வயது மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்..அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

x

சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு சக மாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரத்தில், மாணவனுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கைது செய்யப்பட்ட மாணவன், சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் இழைத்திருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யவேண்டும் என சிறார் நீதி சட்டத்தில் கூறியுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும்

மாணவனை கைது செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் இது சம்பந்தமாக கருத்துக்களை பதில்மனுவாக தாக்கல் செய்யும்படி, தமிழக உள்துறை செயலாளர், சுகாதார துறை செயலாளர், மகளிர் நலன் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்