சட்ட விரோதமாக சென்னை வந்த 16 பேர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்
வங்கதேசத்தில் இருந்து உரிய அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக சென்னை வந்த 16 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில், வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் உரிய அனுமதியில்லாமல் தங்கியிருந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், வயிற்றுப்பிழைப்புக்காக படகு மூலம் கொல்கத்தா வந்ததும், அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வந்ததும் தெரிய வந்தது. மேலும் சாலையோரம் தங்கி குப்பைகளை சேகரித்து சுற்றி திரிந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அடையாள அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் வந்ததால், 16 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story