16 எதிர்கட்சிகள் Vs பாஜக... 2019-ல் நடந்தது என்ன?

x

பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு விகிதங்கள் பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா கட்சி தலைவருமான நிதீஷ் குமார் ஒருங்கிணைத்த கூட்டத்தில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, 2019 நாடாளுமன்ற தேர்தலில், 19.67 சதவீத வாக்குகளை பெற்று, 52 இடங்களில் வென்றது.

மம்தா பானர்ஜியின் தலைமையிலான அகில இந்திய திரிணமுல் காங்கிரஸ் கட்சி 4.1 சதவீத வாக்குகளை பெற்று, 22 இடங்களில் வென்றது.

சி.பி.எம் கட்சி 1.77 சதவீதம் பெற்று 3 இடங்களிலும், சி.பி.ஐ கட்சி 0.59 சதவீத வாக்குகளை பெற்று 2 இடங்களிலும் வென்றன.

ஷரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 1.4 சதவீத வாக்குகளை பெற்று, 5 இடங்களில் வென்றது.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 0.42 சதவீத வாக்குகளை பெற்று, ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, 2.34 சதவீத வாக்குகளை பெற்று, 24 இடங்களில் வென்றது.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, 2.53 சதவீத வாக்குகளை பெற்று, 5 இடங்களில் வென்றது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சி, 2 சதவீத வாக்குகளை பெற்று, 18 இடங்களில் வென்றுள்ளது.

பரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, 0.05 சதவீத வாக்குகளை பெற்று, 3 இடங்களில் வென்றது.

மெகபூபா முப்தி தலைமையிலான ஜம்மு காஷ்மீ மக்கள் ஜனநாயக கட்சி 0.01 சதவீத வாக்குகள் பெற்று அனைத்து இடங்களிலும் தோல்வி யடைந்தது.

ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 0.28 சதவீத வாக்குகள் பெற்று, ஒரு இடத்தில் வென்றது.

ஓம் பிரகாஷ் சவுதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளம், 0.04 சதவீத வாக்குகள் பெற்று தோல்வி யடைந்தது.

மவுலானா பக்ருதீன் அஜ்மல் தலைமையிலான அஸ்ஸாம் ஏ.ஐ.யூ.டி.எப் கட்சி, 0.22 சதவீத வாக்குகள் பெற்று ஒரு இடத்தில் வென்றது.

நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், 1.45 சதவீத வாக்குகள் பெற்று, 16 இடங்களில் வென்றது.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், 1.08 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது.

16 எதிர்கட்சிகளும் சேர்ந்து மொத்தமாக 37.95 சதவீத வாக்குகளை பெற்று, 153 இடங்களில் வென்றுள்ளன.

பாஜக தனியாக 37.7 சதவீத வாக்குகளை பெற்று, 303 இடங்களில் வென்றுள்ளது ஒப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்