1 வருடத்திற்கு முன் தாயை கொன்ற குற்றவுணர்ச்சியில் 15 வயது சிறுவன் விபரீத முடிவு
ஈரோடு மாவட்டம் சுங்கக்காரன்பாளையத்தை சேர்நத் அருள்செல்வன் என்பவரது 15 வயது மகனை அவரது தாய் யுவராணி கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2022 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஹாலோபிளாக் கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த யுவராணியின் தலைமீது சிறுவன் போட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். கடந்த டிசம்பர் மாதம் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த சஞ்சய் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில் தனது தாயை கொன்றுவிட்ட குற்ற உணர்ச்சியிலும், மனவேதனையிலும் சஞ்சய் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாய தோட்டத்தில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சிறுவன் சஞ்சய் குடித்துள்ளான். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலினின்றி உயரிழந்தான்.