6 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் மீட்பு - இந்தியாவின் பிரமாண்ட மாற்றம்

x

இந்தியாவில் 6 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மேலெழுந்துள்ளதாக

நிதி ஆயோக் கூறியுள்ளது. இதன் பின்னணி பற்றி

இந்தத் தொகுப்பு அலசுகிறது.

தனி நபர்களின் தினசரி வருமானத்தின் அடிப்படையில் வறுமை கோடு கணக்கிடப்படுகிறது.

குழந்தைகள் இறப்பு விகிதம், மருத்துவ வசதிகள், கல்வி,

குடிநீர், மின்சாரம், சமையல் எரிபொருள், வாழ்க்கை தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் பல் பரிமாண வறுமை கணக்கிடப்படுகிறது.

இந்தியாவில் 2015-16 முதல் 2019-21 வரையிலான ஆறு ஆண்டுகளில் 13.5 கோடி பேர் பல் பரிமாண வறுமையில் இருந்து மீண்டு மேல்நிலைக்கு உயர்ந்திருப்பதாக நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

பல் பரிமாண வறுமையில் உள்ளவர்களின் விகிதம் 2015-16ல் 24.85 சதவீதமாக இருந்து, 2019-21ல் 14.96 சதவீதமாக 9.89 சதவீதம் குறைந்துள்ளது.

கிராமப்புறங்களில், பல் பரிமாண வறுமையின் அளவு 2015-16ல் 35.29 சதவீதமாக இருந்து 2019-21ல் 19.28 சதவீதமாக குறைந்துள்ளது.

நகர்ப்புறங்களில், பல் பரிமாண வறுமையின் அளவு 2015-16ல் 8.65 சதவீதமாக இருந்து 2019-21ல் 5.27 சதவீதமாக குறைந்துள்ளது.

பீகாரில் இதன் அளவு 2015-16ல் 51.8 சதவீதமாக இருந்து 2019-21ல் 33.7 சதவீதமாக குறைந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், 2015-16ல் 37.6 சதவீதமாக இருந்து 2019-21ல் 22.9 சதவீதமாக குறைந்துள்ளது.

ஜார்காண்டில், 2015-16ல் 42.1 சதவீதமாக இருந்து 2019-21ல் 28.8 சதவீதமாக குறைந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில், 2015-16ல் 36.5 சதவீதமாக இருந்து 2019-21ல் 20.6 சதவீதமாக குறைந்துள்ளது.


13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு

தினசரி வருமானத்தின்

அடிப்படையில்

வறுமை கோடு

கணக்கீடு

குழந்தைகள்

இறப்பு விகிதம்,

மருத்துவம், கல்வி,

குடிநீர், மின்சாரம்

வாழ்க்கை தரம்,

இதர அம்சங்களின்

மூலம் பல் பரிமாண

வறுமை கணக்கீடு

2015-16 டூ 2019-21

13.5 கோடி பேர்

பல் பரிமாண வறுமையில்

இருந்து மீட்பு

பல் பரிமாண வறுமை

2015-16 - 24.85%

2019-21 - 14.96%

9.89% சரிவு

கிராமப்புறங்களில்

பல் பரிமாண வறுமை

2015-16 - 35.29%

2019-21 - 19.28%

நகர்ப்புறங்களில்

பல் பரிமாண வறுமை

2015-16 - 8.65%

2019-21 - 5.27%

பீகாரின் பல் பரிமாண

வறுமை குறைப்பு -

2015-16 - 51.8%

2019-21 - 33.7%

உத்தர பிரதேசம்

2015-16 - 37.6%

2019-21 - 22.9%

ஜார்கண்ட்

2015-16 - 42.1%

2019-21 - 28.8%

மத்திய பிரதேசம்

2015-16 - 36.5%

2019-21 - 20.6%


Next Story

மேலும் செய்திகள்