12த் தேர்வு முடிந்த கையேடு வேலை.. - ரஷ்யா செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்

x

பி்ரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, பள்ளி மாணவர்களிடையே ராக்கெட் அறிவியல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஓராண்டாக தமிழகத்தில் பல்வேறு போட்டிகளை நடத்தினார். பலகட்ட போட்டிகளுக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 70 பேர் ரஷ்யா செல்ல தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் ரஷ்யாவில் உள்ள ராக்கெட் ஆய்வுக்கூடங்களை பார்வையிட உள்ளனர்... தேர்வானவர்களில் சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகளும் அடங்குவர். அரசு பள்ளி மாணவர்கள் ஏழ்மையில் வாடும் நிலையில், ரஷ்ய பயணத்திற்கான செலவை பள்ளி கல்வித்துறை ஏற்றுக்கொண்டால் பேருதவியாக இருக்கும் என ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரஷ்யாவுக்கு தேர்வானவர்களில் ஒருவரான பூஜா 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வரலாற்றில் சதம் அடித்து 600க்கு 540 மதிப்பெண்கள் பெற்றவர்... தந்தை வருவாய் ஈட்ட இயலாத நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடித்த கையோடு ரஷ்யா செல்வதற்கு தேவையான செலவுகளுக்காக தனியார் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார் இவர்... தன்னைப் போலவே பிற மாணவிகளும் நிதி உதவிகளுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், தன்னுடைய இந்த முயற்சிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் பெரும் துணையாக இருந்ததாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்...


Next Story

மேலும் செய்திகள்