பொடுகு தொல்லையால் அவதிப்பட்ட 12ம் வகுப்பு மாணவி..தலைமுடியை வெட்டிய பெற்றோர்..
கரூரில் சாலையோர மரங்களைச் சுற்றி வேர் பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு சாலைப்பணி நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. கரூர் - கோவை சாலை சீரமைக்கும் பணியானது, நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மரங்களைச் சுற்றி வேர் பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு தாரைக் கொட்டி சமன் செய்யப்பட்டுள்ளது. வேர்களுக்கு தண்ணீர் செல்ல வழி இல்லாததால் மரம் காய்ந்து போவதற்கு வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். மரத்தை சுற்றி தண்ணீர் உற்றுவதற்கு ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story