பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமாக மட்டும் கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவில் 12.8 லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் யுபிஐ செயலிகள் மூலம் 782 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன.
முந்தைய நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது, ஏழு சதவீதம் கூடுதல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக, பணப் பரிவர்த்தனை 700 கோடியைத் தாண்டியது.
மேலும், அந்த மாதம் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனையின் மொத்த மதிப்பும் 12 லட்சம் கோடியை எட்டியது.
அக்டோபர் மாதத்தில் நவராத்திரியும் தீபாவளியும் வந்ததால், நாடு முழுவதும் இணைய வர்த்தக சில்லறை விற்பனை அதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டது.
கடந்த ஓராண்டில், யுபிஐ செயலிகள் மூலம் நாடு முழுவதும், 7,404 கோடி பரிவர்த்தனைகள் மூலம், 125 இலட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இதனால், யுபிஐ செயலி மூலமான பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வரியோ கட்டணமோ விதிக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது