உதகையில் 125வது மலர் கண்காட்சி -சுற்றுலா பயணிகளை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள்

x

உதகையில் நடைபெற்று வரும் 125வது மலர் கண்காட்சியில், தோடர் பழங்குடினத்தவரின் நடனம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய இசைக் கலைஞர்களின் நடனங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

உதகையில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சியில் ராணுவத்தினரின் பேண்ட் வாத்தியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை, அமைச்சர் ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, மாவட்ட ஆட்சியர் அம்ரீத் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதில், எம்.ஆர்.சி ராணுவ மையம் சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்காக பேண்ட் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை நிகழ்ச்சியில் பல திரைப்பட பாடல்களின் இசையை, ராணுவத்தினர் வாசித்துக் காண்பித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்