இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-08-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனியன்று தொடங்கி வைக்கிறார்...

சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை காணொலி காட்சி மூலமாக தொடங்கப்படுகிறது...

---

தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

காவலர்களுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்...

---

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு......

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றபோது உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்..............

----

ரவுடிகள், அரசியல்வாதிகள் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு தொடர்பான கொலை, வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணையை

கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது...

சென்னை உயர் நீதிமன்றம் கருத்து...

---

நாடு முழுவதும் சனிக்கிழமை காலை 6 மணி முதல்

ஞாயிறு காலை 6 மணி வரை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்...

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு...

----

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புறநோயாளிகள் பிரிவு இயங்காது, சாதாரண அறுவை சிகிச்சைகள் நடைபெறாது...

அவசர அறுவை சிகிச்சைகள், விபத்து பிரிவுகள் மட்டும் இயங்கும் என அறிவிப்பு... அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு படையினரை நிறுத்த வலியுறுத்தல்...

---

மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதிகேட்டு, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி...

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்...

---

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல...

நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்...

---



Next Story

மேலும் செய்திகள்