"டாக்டர் ஆகணும்னு கனவுல இருந்தானே.. ஸ்கூல்ல விஷம் கொடுத்து கொன்னுட்டாங்களே" - கதறிய தாய், தந்தை

x

கன்னியாகுமரியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த‌ 11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் அஸ்வின் என்ற மாணவன் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்த அஸ்வினுக்கு 25ஆம் தேதி

திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதில், ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்ததால், அந்த மாணவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பள்ளியில் சக மாணவர் ஒருவர் கொடுத்த குளிர்பானத்தை தான் குடித்ததாகவும், அதன் பிறகே உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், அஸ்வின் தாயிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேரளாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்நிலையில், உரிய நீதி கிடைக்கும் வரை, உடலை வாங்க மாட்டோம் என உயிரிழந்த சிறுவனின் தந்தை சுனில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்