இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2023)

x

தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்...2,000 பேர் தேர்ச்சி பெற்றதாக தவறாக விளம்பரம் செய்யப்பட்டதாகவும் பதில்...

குரூப் 4 தேர்வு எழுதியோரில் 5 லட்சம் பேர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்ததாக அதிர்ச்சி தகவல்...தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என சிலர் புகார் அளித்த நிலையில், டிஎன்பிஎஸ்சி விளக்கம்...

டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஆயிரம் பணியிடங்களுக்கு 24 லட்சம் பேர் போட்டி....கேள்வித்தாள்களுக்கே பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்...

ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய, ரிசர்வ் வங்கி அனுமதி மறுப்பு...ரிசர்வ் வங்கியுடன் பேசி விரைவில் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் உறுதி...

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி...வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...

கடலூர் மாவட்டத்தில் நிலக்கரி திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது...விவசாய நிலங்களை ஒருபோதும் கையகப்படுத்த மாட்டோம் என, சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி...

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து மார்ச் 31-ல் ஆலோசனை....தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு...

அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த பயம் ஏன்?....பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி...

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்திக்கு, அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ்...ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு...

ராகுல்காந்தி தகுதி நீக்கம், அதானி விவகாரத்தை எழுப்பி தொடர் அமளி...நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்பு....

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு...நீதிபதி குமரேஷ் பாபு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்...

மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவிகள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள்....சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...

மீனவ பெண்கள், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள், சிறு கடை வைத்திருக்கும் பெண்கள் உள்பட ஒரு கோடி குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை செலுத்தப்படும்....விரைவில் வழிகாட்டு முறைகள் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்