இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-07-2023)

x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோவை டாடாபாத் பகுதியில் போராட்டம்.. மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மக்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு...

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை தடை நீக்கம்...நிபந்தனையுடன் நீக்கி உள்துறை அமைச்சகம் உத்தரவு...

'நீங்கள் எங்களை எப்படி அழைத்தாலும் நாங்கள் இந்தியா தான் பிரதமர் மோடி அவர்களே....'மணிப்பூர் மாநிலத்தை சீராக்கவும், ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கவும் உதவுவோம் என்றும் சமூகவலைதளத்தில் ராகுல்காந்தி பதிவு...

பெயரில் இந்தியாவை சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது என பிரதமர் மோடி விமர்சனம்....இதுபோன்ற திசையற்ற எதிர்க்கட்சிகளை இதுவரை கண்டதே இல்லை என்றும் காட்டம்...

மாநிலங்களவையில் பழங்குடியினர் சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் பேச முயற்சி...மைக்ரோ போன் அணைக்கப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு...

மாநில கூட்டுறவு சொசைட்டி திருத்த மசோதா நிறைவேறியது...மக்களவையில் குரல் வாக்கெடுப்பதன் மூலம் நிறைவேறியதாக அவைத் தலைவர் அறிவிப்பு...

கூட்டுறவு திருத்த மசோதா தொடர்பாக மக்களவையில் அமைச்சர் அமித்ஷா விளக்கம்...மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளி

புதிய மாதிரி பாடத்திட்டத்தால், பல்கலை.கள், தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது...புதிய மாதிரி பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக அமைச்சர் பொன்முடி விளக்கம்...

விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல... நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காக தான் பாடுபடுகிறோம்...எங்கள் அணிக்கும் இந்தியா என்று தான் பெயர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்....

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஹிண்டன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு...வெள்ளத்தில் மூழ்கிய 300-க்கும் மேற்பட்ட கார்கள்...

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது...2 ஆயிரத்து 300 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

கர்நாடகாவில் கபினி மற்றும் கே.ஆர். எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2023)கபினி அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக உயர்வு...


Next Story

மேலும் செய்திகள்