இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-11-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
இந்தோனேஷியாவின் பாலியில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு...இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், புதனன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி...காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 18ம் தேதி வலுப்பெறக்கூடும்... 19ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் இருதரப்பினர் இடையே மோதல்...உருக்கட்டையால் தாக்கிக் கொண்டதால் அதிர்ச்சி.
காங்கிரஸ் நிர்வாகிகள் இருதரப்பினர் மோதலால் பதற்றம்... மண்டை உடைப்பு....போலீஸார் குவிப்பால் பரபரப்பு.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள்...தொகுதி சார்ந்த கோரிக்கை அடங்கிய மனு அளிப்பு.
அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கு....முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
சென்னையில் அறுவை சிகிச்சையில் காலை இழந்த கால்பந்து வீராங்கனை திடீர் மரணம்...பிரியா உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறல்.
கால்பந்து வீராங்கனை பிரியா உடல் வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது...உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு.
ஆவின் பால் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்...ஈரோடு ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு.