இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-06-2023)

x

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு...வரும் 16ம் தேதி வரை 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் என்றும் வானிலை மையம் தகவல்...

யாரையும் பழிவாங்கும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை...அமைச்சர் செந்தில்பாலாஜி கைது குறித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து....

பாஜகவின் கிளை அமைப்புகள், விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது...அதிமுகவின் கொங்குமண்டல கோட்டையை தகர்த்தவர்... அமலாக்கத்துறையால் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து...முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி... களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்...

மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனர், ஓட்டுனர் பணிகளுக்கு உரிய தேர்வு நடைமுறை பின்பற்றப்படவில்லை...வழக்கு தொடர்பான ஆதாரங்களை கலைக்க கூடும் என்பதால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்றும், அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தகவல்...

செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை... அமலாக்கத்துறையின் மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளிவைப்பு...செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதும், நீதிபதி அல்லி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை...

செந்தில்பாலாஜிக்கு, ஜாமின் வழங்க கூடாது... இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை...அமலாக்கத்துறை தரப்பில் வாதம்...

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புழல் சிறை அதிகாரிகள் வருகை...நீதிமன்ற காவலில் செந்தில்பாலாஜி உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்...

செந்தில்பாலாஜிக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்...மருத்துவமனையில் நேரில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி உத்தரவு...

செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை...நீதிமன்ற முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்...

கோவையில் நாளை மறுநாள் திமுக தோழமைக் கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம்...பாஜகவின் ஜனநாயக விரோத பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் என்றும் கூட்டறிக்கை...

"தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற்று, சிபிஐ விசாரணையை மேற்கொள்ள வேண்டும்..."சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை திரும்ப பெற்றது தமிழக அரசு


Next Story

மேலும் செய்திகள்