இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2023)

x

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் வெளி ஆட்களை வைத்து பிரச்சினை தூண்டப்படுவதாக குற்றச்சாட்டு...மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு...

சென்னை தாம்பரம் இரும்புலியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி....தண்டவாளத்தை கடக்காதவாறு இரும்பு தடுப்பு அமைத்த போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு...

ஆஸ்கர் நாயகி பெல்லி அம்மா முதல்முறையாக சென்னைக்கு வருகை...நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்....

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கின்றனர்...அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்...

சென்னை ஐஐடியில் பி.டெக் 3 ஆம் ஆண்டு படித்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் தற்கொலை....தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸா் விசாரணை....

அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட அரங்கிற்கு, அனிதா பெயர் சூட்டல்...அரங்கை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்....

நீட் தேர்வு ரத்து ரகசியத்தை கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்....கல்வி உரிமைக்காக குரல் கொடுப்பதே ரகசியம் என்றும் விளக்கம்....

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பு...மதுரை எம்.பி., வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதி​​ல்...

அரியலூரில் தனியார் பள்ளிக்கு ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்த விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட நிர்வாகி முத்துவேல் கைது...தற்கொலை செய்த மாணவி லாவண்யா படித்த பள்ளி தாளாளரிடம் ரூ. 25 லட்சம் கேட்டு மிரட்டல் புகாரில் நடவடிக்கை...

ஹெச் ராஜா கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் கைது....போராட்டத்தால் விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ....

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது...தடையை மீறி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள செல்ல முயன்ற நிலையில் போலீஸார் நடவடிக்கை...

கடந்த ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளை நீதிமன்றம் மூலமே எதிர்கொண்டோம்....போராட்டம் நடத்தவில்லை என அமைச்சர் கே.என். நேரு பேட்டி...

ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக சீர் செய்ய வேண்டும்....தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

பதில் அளிக்கும் வரை ஆன்லைன் ரம்மி நிறுவனமான கேம்ஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது...சிபிசிஐடி போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

ஆன்லைன் ரம்மி மனித உயிர்களை நித்தமும் பலி வாங்கிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை....தொழில் நுட்பங்களை ஏமாற்றப் பயன்படுத்தும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை...


Next Story

மேலும் செய்திகள்