இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (14-01-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நாம் அடைய வேண்டும்.. அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் நாளை களைகட்டும் பொங்கல் பண்டிகை ... அதிகாலையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்க தயாராகும் மக்கள்...

மதுரை அவனியாபுரத்தில் நாளை நடைபெறுகிறது ஜல்லிக்கட்டு...ஆயிரம் காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர்...

அவனியாபுரத்தில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்...ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கவில்லை எனப் புகார்...

உலகப்புகழ் பெற்ற பாலமேட்டில் நாளை மறுதினம் நடக்கிறது ஜல்லிக்கட்டு போட்டி... தயார் நிலையில் உள்ள வாடிவாசல்... கழுகுப்பார்வை காட்சி...

சென்னை தாம்பரத்தில் பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்....திக்குமுக்காடிய சந்தை பகுதி....

பொங்கல் பண்டிகையையொட்டி தி.நகர், வண்ணாரப்பேட்டையில் குவிந்த மக்கள்...புத்தாடை, பொருட்கள் வாங்க திரண்டனர்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்...கடை வீதிகளில் கடைசி நேர ஷாப்பிங் சூடுபிடித்தது...

சென்னை ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கோலாகலம்...தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி...

இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறப்போகும் ஆண்டு இது...சாதனைகளின் பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து...


Next Story

மேலும் செய்திகள்