இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-07-2023) | 11 PM Headlines | Thanthi TV

x

அழைப்பு விடுக்கும் பாஜக - அடுத்தது என்ன?

டெல்லியில் வரும் 18ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு பாஜக அழைப்பு...

பெங்களூருவில் ஜூலை 17 ,18ம் தேதிகளில் மீண்டும் எதிர்க்கட்சிகள் கூட்டம்...

ஜூலை 18ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஓ.பி.எஸ். தரப்பு அழைக்கப்படவில்லை. இதுகுறித்து அரசியல் விமர்சகர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். தகவல்களை விவரிக்கிறார்கள் செய்தியாளர்கள் பிரகாஷ், ச‌சிதரன், நிர்மல் மற்றும் அமிர்தலிங்கம்...

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், மக்களவை தேர்தல் வரவுள்ளதால் காவல்துறை மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இன்றைய முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

செந்தில்பாலாஜி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் விசாரணை

"கைதுக்கான காரணம் - ஆவணத்தை பெற மறுத்தது ஏன்?"

செந்தில்பாலாஜி தரப்புக்கு நீதிபதி கேள்வி

செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில், கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை வழங்கிய போது, அதை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன் என, நீதிபதி கேள்வி எழுப்பினார். இன்றைய காரசார விவாதங்கள் குறித்த அண்மை தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் சுரேஷ்...

தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

ஐ.பி.எல் மற்றும் உலக அழகி போட்டியை தியேட்டர்களில் ஒளிபரப்ப அனுமதிக்க தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை...


Next Story

மேலும் செய்திகள்