இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-10-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 11ம் தேதி வரை நடைபெறும்...

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு...

தமிழக சட்டப்பேரவையில் நாளை 5 மசோதாக்கள் தாக்கலாகிறது...

சம்பள மசோதா, தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா, மதுவிலக்கு திருத்த மசோதா உள்ளிட்டவற்றை அமைச்சர்கள் தாக்கல் செய்கின்றனர்...

தமிழக சட்டப்பேரவையில் காவிரி நீர் தொடர்பான தனித் தீர்மானம் நிறைவேற்றம்...

ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு...

செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

காவிரி நீர் தொடர்பான தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேச்சு...



Next Story

மேலும் செய்திகள்