இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04-03-2023)
வதந்தி காரணமாக, வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.....தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சாந்தகுமார் தகவல்....
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புவோர் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும்.....தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்....
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில், சிலர் சமூக வலைதளங்கள் மூலம் கீழ்த்தரமான அரசியல் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...வதந்தி பரப்பி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...
வடமாநில தொழிலாளர்களை பாதுகாப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக நேற்று அண்ணாமலை பாராட்டு....வட மாநிலத்தவர் சர்ச்சைக்கு திமுகவினரே காரணம் என இன்று விமர்சனம்......
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.....தமிழ்நாடு வந்துள்ள பீகார் அரசின் குழு பாராட்டு....
பீகாரில் இருந்து 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சென்னை வருகை...தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை....
பிரபாகரன் பற்றிய ஆதாரம் கிடைத்ததும் வெளியிடுவேன்....உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பேட்டி.....
மக்களுக்காக பணி செய்யவே காத்திருக்கிறோம்...தேர்தலுக்காக அல்ல....நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேச்சு.....
அரசியலமைப்பு சட்டம் கூறும் அனைத்தும் ராம ராஜ்ஜியத்தில் இருந்துள்ளது.....இந்தியாவின் வளர்ச்சி தேசபக்தி மற்றும் தெய்வபக்தி இணைந்ததாக இருக்க வேண்டும் என ஆளுநர் ரவி வலியுறுத்தல்....