வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள் புதுவை முதல்வர் கொடுத்த உறுதி
புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்... இது கடந்த ஆண்டை விட 3.8 சதவீதம் குறைவு ஆகும்... அரசு பள்ளிகளை பொருத்தவரை தேர்ச்சி சதவீதம் 78.92 ஆக உள்ளது... புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 7 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன... கணிதத்தில் 61 மாணவர்களும், அறிவியலில் 49 மாணவர்களும், சமூக அறிவியலில் 19 மாணவர்களும் சதம் அடித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன், வரும் கல்வியாண்டு முதல் 116 அரசு பள்ளிகளில், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் படி கல்வி கற்பிக்க பயிற்சி அளிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, அடுத்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.