குடும்ப தலைவிகள் மாதம் ரூ.1000 பெற ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்ற வேண்டுமா? - “கணவன் வருமானம் கணக்கிடப்படலாம்“

x
  • குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாகும்... மக்கள் மத்தியில் கவனம்பெற்ற அறிவிப்புகளில் ஒன்றும் கூட..
  • ஆனால் திமுக அரசு சொன்னப்படி இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டு வந்தது.
  • திட்டம் தொடர்பாக பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் ஆலோசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 85 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக கடந்த டிசம்பரில் குறிப்பிட்டார்.
  • இதனையடுத்து திட்டம் 2023 பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது
  • . இந்த சூழலில் ஈரோடு கிழக்கில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
  • இதனையடுத்து யார்... யாருக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
  • இதற்கிடையே பயனாளர்களை தேர்வு செய்வதற்கான நிதித்துறை மற்றும் வருவாய்துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர் களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • அதன்படி PHH என்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முன்னுரிமையுள்ள குடும்ப அட்டைதாரர்கள், PHH -AAY என்ற அந்த்யோதயா அன்ன யோஜனா திட்ட அட்டை, அதாவது 35 கிலோ அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க வாய்ப்புள்ளது.
  • வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானம் கணக்கிட வாய்ப்பு உள்ளது.
  • அரசு ஊழியர்கள் இருக்கும் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • புதுபமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளின் தாயார்கள் பயன்பெறலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இதுபோல 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவி தொகை வழங்குவதில், இந்த திட்டம் எந்த தாக்கத் தையும் ஏற்படுத்தாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • குடும்ப தலைவிக்குதான் உரிமைத் தொகை என்பதால் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை
  • மார்ச் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டத்தை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பயனாளர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படுவது தொடர்பாக அமைச்சரவை கூடி ஒப்புதல் வழங்கியதும் விரிவான அரசாணை வெளியிடப்படும்.

Next Story

மேலும் செய்திகள்