ரூ.1000 உரிமைத் தொகை... "19 ஆம் தேதி" - தலைமை செயலாளர் சொன்ன அட்வைஸ்
"கலைஞர் மகளிர் உரிமைத் தொகை" திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, கண்காணிப்பு அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விரிவாக ஆலோசனை நடத்தினார். அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட அரசாணையில் அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகளையும், கண்காணித்து உறுதி செய்யபப்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார். முகாம்களை ஏற்பாடு செய்வது, முகாம்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, விண்ணப்பதாரர் காத்திருக்கும் அறைகள், கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது எனவும், திட்டப் பயனாளிகள் கண்டறியும் செயல்பாடுகள், பணிகளின் முன்னேற்றம் குறித்து களஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். முதல் கட்டமாக, வரும் 19-ஆம் தேதி, கண்காணிப்பு அலுவலர்கள், அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினார்.