ரூ.100 கோடியில் மீன்பிடித் துறைமுகம் புனரமைக்கும் பணி... எம்.பி.க்கு காத்திருந்த அதிர்ச்சி!

x

கடலூர் மீன்பிடித் துறைமுகம் புனரமைப்பு பணிகளை சரிவர செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எம்.பி. ரமேஷ் எச்சரித்துள்ளார். முதுநகர் மீன்பிடித் துறைமுகம் புனரமைக்கும் பணி 100 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதனை, ஆய்வு செய்த எம்.பி. ரமேஷ், பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது என்றார். 87 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், பணிகளைப் பார்த்தால் 10 கோடி ரூபாய் தான் செலவாகியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். குறைகளை சரி செய்யாவிட்டால், ஒப்பந்த‌த்தை ரத்து செய்யவும், நிதியை நிறுத்தி வைக்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரைப்பேன் என்று எம்.பி. எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்