வீடியோ கேமில் தோற்றதால் ஆத்திரம்....11 வயது சிறுவனை சுட்டுக் கொலை செய்த 10 வயது சிறுவன் | mexico
மெக்சிகோவில் வீடியோ கேம் சண்டையில் 10 வயது சிறுவன் 11 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாநிலமான வெராக்ரூசில், வீடியோ கேமில் தோற்று விட்டதால் ஆத்திரம் அடைந்த 10 வயது சிறுவன் தனது வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து 11 வயது சிறுவனின் தலையில் சுட்டு கொலை செய்துள்ளான். தொடர்ந்து கொலை செய்த சிறுவனும் அவனது குடும்பமும் தப்பியோடிய நிலையில், தனது மகனின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் கண்ணீர் வடித்தார். போதைப்பொருள் கும்பல்களுக்கிடையே நிலவும் மோதல்களால் வெராக்ரூஸ் மிகவும் வன்முறை நிறைந்த மாநிலமாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story