இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகம் வந்து சேர்ந்தனர்
ராமேஸ்வரம் தனுஷ்கோடி நவ 23. பொருளாதார நெருக்கடி இலங்கையில் மக்கள் வாழ முடியாததால் படகு மூலமாக தனுஷ்கோடி வந்த 10 இலங்கை தமிழர்கள்.
இலங்கையில் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி நிலை நீடித்துவரும் நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது இதனால் அங்கு வாழும் மக்கள் மிகவும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ள காரணத்தினால் வாழ்வாதாரம் தேடி கடலில் படகு மூலமாக ராமேஸ்வரத்திற்கு அகதிகளாக தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 200க்கும் மேற்பட்டோர் அகதிகளாக தஞ்சம் அடைந்து மண்டபம் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வவுனியா பகுதியில் இருந்து புவனேஸ்வரி குடும்பத்தில் இருந்து மூன்று பேரும் உதயசூரியன் குடும்பத்திலிருந்து ஆறு பேர் மற்றும் தனி நபர் ஒருவர் என மொத்தம் ஐந்து சிறுவர்கள் ஐந்து பெரியவர்கள் என பத்து பேர் அகதிகளாக இன்று காலை தனுஷ்கோடி வந்துள்ளனர்.
அவர்கள் தனுஷ்கோடி வந்த தகவலை அப்பகுதி மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தெரிவித்த நிலையில் மரைன் போலீசார் அவர்களை அழைத்து வந்து தனுஷ்கோடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் மண்டபம் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு சென்று உள்ளனர்