மாதுளை பழம் சாப்பிட்ட 1½ வயது குழந்தை.. திடீரென மயங்கி விழுந்து பலி - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாதுளை பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாலிக் நகர் பகுதியை சேர்ந்த ராஜா அனீஸ் - பாத்திமா தம்பதியினரின் ஒன்றரை வயது மகன் முகமது அர்ஷத். குழந்தை முகமது அர்ஷத் மாதுளை பழத்தை சாப்பிடதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் குழந்தை திடீரென வாந்தி எடுத்து மயங்கிய நிலையில், அம்பை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது அர்ஷத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கடையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை திடீரென இறந்தது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story