மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.02.2023)

x

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டி .....ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணா - எப்டன் ஜோடி வெற்றி......

உக்ரைனுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ள அமெரிக்கா.....மேலும் 16 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்கியது....

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை அறிவித்தார், கனடா பிரதமர் ட்ரூடோ....உக்ரைனுக்கு மேலும் 2 பீரங்கிகள் வழங்குவதாகவும் உறுதி.....

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 12 நாட்கள் நடைபெறும் மாசித் திருவிழா .....கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலாஃப்பிற்கு, அரசு சார்பில் மரியாதை....கைகுலுக்கி வரவேற்றார், பிரதமர் மோடி.....

சாலையில் நடந்து சென்று முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குசேகரிப்பு....ஈரோடு கிழக்குத் தொகுதி பிரசாரத்தில், செல்ஃபி எடுத்து மக்கள் உற்சாகம் ....

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், உறுதிமொழி தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்?....இலவச செல்போன், மினரல் வாட்டர் போன்ற திட்டங்களை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் கேள்வி.....

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்.....எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலடி....

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதே தமது லட்சியம்....தன்னுடைய காலத்திலேயே நிகழும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை....

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்....ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி.....


Next Story

மேலும் செய்திகள்