மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.11.2022)

x

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது...சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

யார், எதைச் சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கேள்வி கேட்கும் பகுத்தறிவை வளர்க்க வேண்டும்....சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட முன்வடிவு குறித்து பேச ஆளுநரை சந்திக்க முடிவு...இன்று, நாளை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தகவல்...

கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி உயிரிழந்த சம்பத்தில் விசாரணைக்கு அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை...மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி..

பாஜக கட்சி பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாத காலத்திற்கு நீக்கம்....கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கை...

ஆஸ்திரேலியா அருகே, சாலமன் தீவில் 7 புள்ளி 3 ரிக்டர் அளவில் பயங்கர நிலடுக்கம்...

நாடாளுமன்ற சுகாதார ஆலோசனைக் குழு உறுப்பினராக அதிமுக எம்.பி., தம்பிதுரை நியமனம்..மத்திய சுகாதாரத்துறைத் துறை அறிவிப்பு

ஒப்பந்த நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள்....

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மக்களை அச்சுறுத்தும் மக்னா காட்டு யானை கண்காணிக்கும் பணி தீவிரம்...முதுமலையில் இருந்து விஜய், வசிம் என்ற 2 கும்கி யானைகள் வரவழைப்பு...

கண்ணூர் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து 30,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்