மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.12.2022)

x

அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய கட்டிடப் பணிகள் தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.......அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கான புதிய வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .....

வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் உரிமத்தை வாங்கியது, ரெட் ஜெயன்ட் நிறுவனம்.....சென்னை, கோவை உள்பட 4 ஏரியாக்களில் வெளியிடுகிறது.....

க.அன்பழகனின் நூற்றாண்டு விழா சிறப்பு புகைப்பட கண்காட்சி.....சென்னை அண்ணாஅறிவாலயத்தில் தொடங்கி வைத்து பார்வையிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்.....

தமிழ்நாடு கோயில் மனை குடியிருப்போர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.....விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்பு....

ஆவினில், நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு.....கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரிப்பு.....

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் விமரிசையாக நடந்த குதிரை வண்டி பந்தயம்......வழிநெடுகிலும் ஆரவாரத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்....

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு.....பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் விற்பனை என பீகார் அரசு குற்றச்சாட்டு

பிரதமர் மோடி குறித்த பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம்....காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்....

மலேசியாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்வு.....மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தீவிரம்.....

அயர்லாந்து நாட்டின் பிரதமராக 2வது முறையாக பதவியேற்கிறார், லியோ வராத்கர்.....இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வராத்கர், அயர்லாந்தின் மிக இளம்வயது பிரதமர்....


Next Story

மேலும் செய்திகள்