மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.12.2022)

x

அந்தமான் கடற்பகுதியல் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை....அடுத்த 5 தினங்களுக்கு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகாது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தின் வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை....தலைமை ஆசிரியர்களே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என உத்தரவிட்ட நிலையில், ஆட்சியர் ஆர்த்தி அறிவிப்பு....

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிற்பகல் 3 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தல்...மாவட்ட ஆட்சியர் உத்தரவு...

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு...நீர்வரத்தை பொறுத்து கூடுதலாக நீர் திறக்கவும் வாய்ப்பு...

கள்ளக்குறிச்சி அருகே ஏரிக் கால்வாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு...நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், 500 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு...

திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஏரயில் உபரிநீர் திறப்பு....செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 200 வீடுகளை சூழ்ந்த நீர்...

புதுச்சேரியில் திமுக ஆட்சி மலரும் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை...திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவதே தற்போதைய தேவை என்றும் பேச்சு...

முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணித்த மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை தேவை...சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார்...

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா காரில் தொங்கியபடி சென்றது மேயர் விருப்பமா? நேயர் விருப்பமா? எனத் தெரியவில்லை....புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி...

கான்வாயில் ஆணுக்கு நிகராக சென்ற மேயரின் பணியை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சிக்கக் கூடாது....இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கருத்து...


Next Story

மேலும் செய்திகள்