மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (02.12.2022)

x

தமிழகத்தில் வருகிற 6ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு......5 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.....தலைவர்கள், நடிகர்கள் படம் நம்பர் பிளேட்டில் இடம்பெறக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கிழக்கு கடற்கரை சாலையை ஆறு வழித்தடமாக மாற்றும் பணிகள் தொடங்கின....நெடுஞ்சாலைத் துறை தகவல்....

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் முற்றுகை.....கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்பு போராட்டம்....

திருவண்ணாமலை மகா தீப நாளில், மலையேற 2500 பேருக்கு அனுமதி....மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.....

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் மருத்துவ மையங்கள்....காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார், முதல்வர் ஸ்டாலின்....

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடுகிறது திமுக அரசு.....திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு....

கொடநாடு வழக்கில் 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களில் உண்மை தன்மை அறியும் சோதனை.....நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல்.....

ஆறாம் வகுப்பு கணித பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி விளையாட்டு பகுதி.....அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு.....


Next Story

மேலும் செய்திகள்