மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.12.2022)

x

ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா....சவால்களை தீர்க்க ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நேரம் இது என பிரதமர் மோடி கருத்து....

83வது நாளை எட்டிய ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம்....மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் திரளானோர் பங்கேற்பு....

சென்னையில் மெட்ரோ பணிக்காக மெரினா காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்ற திட்டம்....குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கான இடமும் மாறுகிறது....

ஜல்லிக்கட்டுக்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.....உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்....

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு...ஆன்லைன் ர​ம்மி தடைச்சட்ட மசோதா காலாவதியான நிலையில் சந்திப்பு...

ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதா மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி....ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு, அமைச்சர் ரகுபதி பேட்டி

தமிழகம் வருகையின் போது, பிரதமருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விவகாரம்....தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் விளக்கம் கேட்பு.....

திமுக மாவட்ட செயலாளர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை......நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை...

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள்....திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்....

தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய 90 ஆயிரம் டன் யூரியா வரத்து....தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தகவல்...

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி.....சென்னை தனியார் மருத்துவமனையில், இன்று ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற இருப்பதாக தகவல்...

சிவகங்கையில் தலையை துண்டித்து இளைஞர் கொடூர கொலை.....தலை இல்லாததால் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்.....


Next Story

மேலும் செய்திகள்