"வீட்டில் இறால் வளர்க்க 1 லிட்டர் கடல் நீர் போதும்" - விஞ்ஞானிகள்
லட்சத்தீவில் அருகே உள்ள கடல் பகுதியில் 4 வகையான வண்ண வண்ண இறால்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பவள பாறைகளில் உள்ள இந்த வண்ண இறால்களைவீட்டில் வளர்க்க ஒரு லிட்டர் கடல்நீரே போதுமானது என கூறும் விஞ்ஞானிகள், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 4 வகையான இறால்களில் 3 இறால்களுக்கு, லட்சத்தீவு பகுதி மக்களின் விருப்பத்திற்கு இணங்க... அந்த பகுதியை சிறப்பிக்கும் வகையில் பெரியரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை சர்வதேச விஞ்ஞானிகளும் அங்கீகரித்துள்ளனர். தற்போது லட்சத்தீவில் உள்ள சுய உதவி குழுக்கள் இறால் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளதாகவும், இவற்றை சாதாரண மக்களும் தங்கள் வீடுகளில் அலங்கார மீன்களை போன்று வளர்க்கலாம் என்றும் தேசிய மீன் மரபணு பேனகம் கொச்சி முதல் நிலை விஞ்ஞானி அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story