நாளுக்கு நாள் ஏறி வரும் மவுசு... சாகச மாணவர்களுக்கு 1 கிலோ தக்காளி பரிசு
நாளுக்கு நாள் ஏறி வரும் மவுசு... சாகச மாணவர்களுக்கு 1 கிலோ தக்காளி பரிசு
குன்றத்தூரில் வர்ம அடிமுறை ஆட்டசாலையில் வீர சாகசம் செய்த மாணவர்களுக்கு பரிசாக 1 கிலோ தக்காளி வழங்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது... குன்றத்தூரில் வர்ம அடிமுறை ஆட்ட சாலையில் பயிற்சி பெற்ற மாணவர்கள் வீர சாகசங்களை செய்து காட்டினர்... சிலம்பம், தீ பந்தம் ஆகியவற்றை சுழற்றி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களையே அசர வைத்தனர்... வர்ம அடிமுறை ஆசிரியர்கள் ஆக்ரோஷமாக சாகசம் செய்தது மாணவர்களை உற்சாகம் கொள்ளச் செய்தது... வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொதுவாக மதிப்புமிக்க பரிசைத் தான் வழங்குவார்கள்... ஆனால் இப்போதைய சூழலில் தக்காளிக்குத் தான் நாளுக்கு நாள் மவுசு ஏறி வரும் நிலையில், சாகசம் செய்த மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழுடன் தங்கம் போல் விலையேறிக் கொண்டே இருக்கும் தக்காளிப் பழங்கள் பரிசாக வழங்கப்பட்டன...