மக்களை கவர்ந்து 1 கோடி மோசடி - செக் வைத்த சென்னை போலீசார்

x

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படும் நகைகடைக்கு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரசிகாமணியைச் சேர்ந்த கணேசன் சுரண்டை மற்றும் சேர்ந்தமரத்தில், நகை அடகு கடை நடத்தி வருகிறார். பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, 6 மாதத்தில் 2 ஆயிரம் வாடிக்கையாளர்களை சேர்த்த அவர், வட்டி இன்றி தங்க நகை கடன், ஏல சீட்டுகள் மூலம், ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், சென்னையிலிருந்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நகைக்கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்